|
| சாதனை படைத்த 'கஜினி' முருகதாஸ்! |
அமீர் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தி 'கஜினி', பாலிவுட்டின் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
கிறிஸ்துமஸ் அன்று வெளியான இப்படம் முதல் 12 நாட்களில் அதாவது ஜனவரி 4ம் தேதி வரை, ரூ.81 கோடிகளை வசூலித்துள்ளது. இது எந்த இந்திப் படமும் இதுவரை செய்யாத சாதனை.
காதல் மற்றும் இசை சம்பந்தமான இந்திய படங்களுக்கே சர்வதேச மார்க்கெட்டில் வரவேற்பு உண்டு என்பது பொதுவான நம்பிக்கை.
ஆனால், அதிரடி ஆக்சன் படமான கஜினி, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் ஏக வரவேற்பை பெற்றிருப்பது மற்றொரு சாதனை.
கஜினியின் இந்த சாதனைப் பட்டியல் தொடரும் நிலையில், அடுத்தப்படத்தையும் இந்தியிலேயே இயக்க முடிவு செய்திருக்கிறாராம் முருகதாஸ்.
இதற்கிடையே, முருகதாசின் வெற்றியை தங்களது வெற்றியாக நினைத்து கொண்டாடுகிறார்கள் உதவி இயக்குனர்கள்.
காரணம், உதவி இயக்கினர்களிடம் கதை சொல்வதையே கவுரவக்குறைவாக நினைப்பவர்கள் மத்தியில், முருகதாஸ் தனது உதவியாளர்கள் அனைவரையும் 'கஜினி' கதை விவாதத்துக்காக கலிஃபோர்னியா அழைத்து சென்றதுதான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|