|
| பாரதிராஜாவின் கோபம் |
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக இயக்குனர் சீமான், இரண்டாவது முறையாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்நிலையில், விடுதலைப்புலிகளின் பணம் திரையுலகில் நடமாடுவதாக திடீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருந்தார் காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.
இந்த குற்றச்சாட்டு தமிழ் திரையுலகில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரை இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதன் பின்னர், இயக்குனர் பாரதிராஜா வழக்கம் போல் கொந்தளிப்புடன் பேசினார்.
“விடுதலைப் புலிகளுடனான தொடர்பு குறித்து மத்திய உளவுத்துறை கண்காணித்து வரும் நிலையில், தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு விடுதலைப் புலிகள் நிதி கொடுக்கிறார்கள் என்ற எஸ்.ஆர்.பி.யின் குற்றச்சாட்டு மத்திய அரசை களங்கப்படுத்துவதுபோல் உள்ளது.
இந்த குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லையேல் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார் பாரதிராஜா.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|