|
| இந்தி 'கஜினி': முருகதாஸுக்கு மரியாதை |
என்னத்தான் கோடம்பாக்கத்தில் பெயரும், புகழும் கிடைத்தாலும் இந்தி திரையுலகில் ஓர் படம் இயக்கிவிட வேண்டும் என்பது நம்மூர் இயக்குனர்களின் கனவு.
மணிரத்னம், தொடர்ந்து இந்திப் படங்கள் இயக்கினாலும், சூப்பர் ஹிட் வெற்றியை ருசித்து வெகுநாளாகிவிட்டது. கமலின் தொடர் முயற்சிகள் கூட பெரியளவில் வெற்றியை தரவில்லை.
இந்நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் இந்தி 'கஜினி' இயக்கும் வாய்ப்பு பெற்ற ஏ.ஆர்.முருகதாஸ், அதில் வெற்றியும் பெற்று, இந்தி திரையுலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
இந்தி 'கஜினி'யை பார்த்து வட இந்தியாவே வியந்து போய் உள்ளது. இப்போது, ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் அனைவரும் நம்மூர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்காக காத்திருக்கின்றனர்.
இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்ந்த முருகதாஸை தமிழ் திரைப்பட இயக்குனர்களும் பாராட்டி, பெருமைப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற இயக்குனர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்துக்கு வந்த முருகதாஸை மேடைக்கு அழைத்து வந்து, சால்வை அணிவித்து பாராட்டினார் இயக்குனர் கே.பாலசந்தர். அப்போது, அனைத்து இயக்குனர்கள் கண்களிலும் ஓர் ஏக்கம் தெரிந்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|