|
| கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு போதாத காலம் |
சினிமா உலகில் கார்ப்பரேட் கம்பெனிக்களுக்கு இது போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும்.
பெரிய ஹீரோக்களை வைத்து, கோடி கோடியாய் சம்பளம் கொடுத்து, பாடல் காட்சிக்காகவும் கிராஃபிக்ஸ் வேலைகளுக்காகவும் பணத்தை கொட்டித் தீர்த்து, படம் முடித்து ரிலீஸ் செய்தால்... பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் இல்லை.
இது போதாதென்று, சுனாமியாய் சுழன்றடிக்கும் பொருளாதார நெருக்கடி, கார்ப்பரேட் நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை.
இப்படி பெரிய நிறுவனங்கள் கூட இரண்டு படங்களிலேயே கம்பெனியை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்றும் அந்த நிலையில் உள்ள பல கம்பெனிகள், வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் பல முன்னணி நிறுவனங்கள் கூடி உட்கார்ந்து பேசி, இனிமேல் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே எடுப்பது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
போதாத காலம் கார்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமல்ல, அவர்களை நம்பி ஹைடெக் கனவில் மிதக்கும் பெரிய ஹீரோக்களுக்கும் தான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|