|
| 'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள் |
'மர்மயோகி' படம் கைவிடப்பட்டதாகவும், அடுத்ததாக கமல் 'தலைவன் இருக்கிறான்' என்ற புதிய படத்தில் நடிக்கப் போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
உலகப் பொருளாதார நெருக்கடியால் தான் 'மர்மயோகி' படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று அதை தயாரிக்கும் பிரமிட் சாய்மீரா விளக்கம் அளித்திருந்தது.
ஆனாலும் 'மர்மயோகி' படம் தொடர்பான மர்மங்கள் இன்னும் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இது குறித்து கமலின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மர்மயோகி படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுவதில் துளியும் உண்மையில்லை. சில தெளிவான முடிவுகளை திட்டமிட்டப் பிறகு மீண்டும் மர்மயோகி தொடங்கப்படுமாம்.
அடுத்ததாக, கமல் நடிக்கும் படம் பற்றியும் அவர் விளக்கம் அளித்தார். படத்தின் பெயர் 'தலைவன் இருக்கிறான்' என்பது சரியல்ல. 'தலைவன் இருக்கின்றான்' என்பதே சரி என்று நிகில் முருகன் கூறியுள்ளார்.
படத்தில் பணிபுரியும் கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் முடிவான பிறகு 'தலைவன் இருக்கின்றான்' படம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|