|
| இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்? |
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொதுவாக இந்தி நடிகர்கள் தங்களது பிளாக் வழி கிளப்பிவிடும் சர்ச்சைகள் சுவாரசியமானவை. சலசலப்பை ஏற்படுத்துபவை.
சில மாதங்களுக்கு முன் அமீர்கான் தனது நாயின் பெயர் ஷாருக் என்று தனது பிளாக்கில் குறிப்பிட்டது, சர்ச்சையை கிளப்பியது. அமீர் மன்னிப்பு கேட்ட பிறகே பிரச்சனை முடிவுக்கு வந்தது.
கோலிவுட்டைப் பொறுத்தவரை அசின், விக்ரம் ஆகியோர் தங்களது பெயரில் பிளாக் தொடங்கி உள்ளனர். ஆனால் இதில் உடனுக்குடன் அப்-டேட் செய்யாததால் சுவாரசியமின்றி உப்பு சப்பில்லாமல் உள்ளன.
பிளாக் மோகத்திற்கு நடிகர் விஷாலும் தப்பவில்லை. 'விஷால்பிளாக் டாட் காம்' என்ற பெயரில் புதிய பிளாக்கை அவர் தொடங்கியுள்ளார். மற்றவர்களைப் போல் இவரும் தூசுபடிய விடுவாரா இல்லை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவாரா?
எதுவானாலும் விஞ்ஞான யுகத்துக்கேற்ப தங்களை மாற்றி கொள்ள நடிகர்கள் முயல்வது பாராட்ட வேண்டிய விஷயம் தான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|