யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ரஜினி பிறந்தநாள் ரத்து பின்னணி
சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை கொண்டாடக் காத்திருந்த ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். டிசம்பர் 12 ஆம் தேதியன்று தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று அவரே கூறிவிட்டது தான் இதற்கு காரணம்.

சென்னையில் ரசிகர்கள் குவிவதை தவிர்க்க, வழக்கமாக பிறந்தநாளின் போது வெளியூர்களுக்கு சென்று விடுவது ரஜினியின் வழக்கம்.

ஆனாலும் இங்கிருக்கும் ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த முறை பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி ரஜினி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுபற்றி ரஜினி ரசிகர் மன்றத்தின் பொறுப்பை கவனித்து வரும் சுதாகர் கூறுகையில், 'இலங்கைத் தமிழர்கள் துயரத்தை அனுபவித்து வருவது ரஜினியின் மனதை ரொம்பவே பாதித்துள்ளது' என்றார்.

அங்கே நம் சகோதரர்கள் செத்து மடியும் துயரமான நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் எனத் தீர்மானிக்கும் அளவுக்கு மனம் நொந்து போயிருக்கிறாராம் சூப்பர் ஸ்டார்.

எனவே அன்னதானம், ஏழைகளுக்கு உதவி என்று ரஜினி பிறந்தநாளை எளிமையாக, பயனுள்ள வகையில் கொண்டாடத் தீர்மானித்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நடிகைகளுடன் சுந்தர் சி. போட்ட ஆட்டம்
வசூலில் முதலிடத்தில் வாரணம் ஆயிரம்
இனப் படுகொலையை விளக்கும் படம்
ஜெய் ஆகாஷுடன் நடிக்க மறுத்த நடிகை
மனைவிக்கு வாய்ப்பு தந்த இயக்குனர்
எஸ்.ஜே. சூர்யாவின் அதிரடி முடிவு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...