யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ஜெய் ஆகாஷின் மதன்!
நடிகராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் ஜெய் ஆகாஷ், தற்போது 'காதலன் காதலி' படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.

"என்னை வைத்து இயக்கியவர்கள் சரியில்லாத காரணத்தினால் எனது படங்கள் ஓடவில்லை. அதனால்தான் எனது படத்துக்கு நானே இயக்குனராகி விட்டேன்" என்று அதற்கு காரணமும் சொல்கிறார் ஜெய் ஆகாஷ்.

'காதலன் காதலி' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, 'மதன்' என்ற படத்தையும் தொடங்கியிருக்கிறார் ஜெய் ஆகாஷ். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் எல்லாம் அவரே. அத்துடன் எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று, கோடம்பாக்கத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அனாதையான ஹீரோ, எல்லா சொந்தங்களும் உடைய பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். அவனது வாழ்க்கையில் இரண்டு பெண்கள் குறுக்கிறார்கள். ஒருத்தி ஹீரோவை அடைய தனது எல்லா சொந்தங்களையும் உதறிவிட்டு வர தயாராக இருக்கிறார்.

மற்றொருவர் சொந்தங்கள் சம்மதத்துடன் மட்டுமே ஹீரோவை அடைவது என்ற முடிவில் இருக்கிறாள். இதில் யாரை ஹீரோ தேர்வு செய்கிறார் என்பது 'மதன்' படத்தின் கதை.

சுனேனா, ராதிகா மேனன் இருவரும் நாயகிகள். இவர்களுடன் சந்தானம், சுமித்ரா, தேவன், ஆர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தை மீடியா பிளாண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' இசை வெளியீடு!
மீண்டும் 'காதலில் விழுந்தேன்' கூட்டணி!
சிங்கள திரையுலகம் போட்டி உண்ணாவிரதம்!
கட்டுமானப் பணியில் 'ஆனந்தபுரத்து வீடு'!
'ஐந்தாம்படை'யில் சிம்ரன், தேவயானி!
கதாநாயகிகளுடன் ஆட்டம்போடும் வைகைப்புயல்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...