|
| லாடம் படத்துக்கு வந்த சிக்கல் |
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கும் 'லாடம்' படம் கிட்டத்தட்ட முடிவு பெற்று ரிலீசுக்கு தயாராக இருந்தது.
ஆனால் அப்படம் இப்போது கோர்ட் படியேறி இருக்கிறது. படத்தை வெளியிடக்கூடாது என்று வழக்கு தொடுத்தார் தயாரிப்பாளர் சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம்.
பிரபு சாலமன் 'லாடம்' படத்தின் கதையை முதலில் சொன்னது சோழா பொன்னுரங்கத்திடம் தானாம். கதை கேட்டவுடன் இயக்குனருக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்ததோடு, பல டெக்னீஷியன்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்.
அதன்பின் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படம் தள்ளிப்போக... அதே கதையை காஸ்மோஸ் என்டர்டெய்ன்மெண்ட் ஜே.பி. குமார், டி.வி. செளத்ரி ஆகியோரிடம் சொல்லி படத்தையும் ஆரம்பித்துவிட்டார்.
இதனால் கடுப்பான பொன்னுரங்கம் வழக்கு தொடர, லாடத்தை வெளியிட கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.
படம் நன்றாக வந்திருப்பதால் ஒரு பெரிய தொகை தருவதாக பேரம் பேச, ஒத்துக் கொண்டு தற்போது வழக்கை வாபஸ் வாங்க முடிவு செய்திருக்கிறார் பொன்னுரங்கம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|