|
| ரஜினியைத் துரத்தும் சர்ச்சைகள் |
ரஜினி என்ன சொன்னாலும் அது தலைப்புச் செய்தியாகிவிடுகிறது. அத்தோடு நின்று விட்டால் பரவாயில்லை. அதனை தொடர்புபடுத்தி வழக்கம் போல் அவரை வம்புக்கு இழுப்பது நின்றபாடில்லை.
கடந்த 3 ஆம் தேதி சென்னையில் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. இந்த சந்திப்பின் போது மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் 'கடமையை செய்! பலனை எதிர்பார்!' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 'கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே' என்ற பகவத் கீதையின் புகழ்பெற்ற வாசகத்தை ரஜினி கொச்சைப் படுத்திவிட்டதாக, அவை குற்றம்சாட்டியுள்ளன.
தனது தவறுக்கு ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டு முன் போராட்டம் நடத்தப்போவதாகவும், அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.
சர்ச்சையின் மறு பெயர் தான் ரஜினியோ?
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|