யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சம்பளத்தைவிட கதையே முக்கியம் : சந்தியா
எனக்கு சம்பளத்தை விட, படத்தின் கதையே முக்கியம் என்கிறார், 'காதல்' சந்தியா.

'கதைகளைத் தேர்வு செய்து, எப்படிப்பட்ட கேரக்டர், யார் இயக்குனர் என்று கேட்டுப் பிடித்திருந்தால் மட்டும் நடிக்கிறேன்' என்று அவர் கூறி வருகிறாராம்.

ஆனால், சந்தியாவின் சமாளிப்புக்கு முக்கியக் காரணம், புதிய வாய்ப்புகள் ஏதும் குறிப்பிடத்தக்க வகையில் வரவில்லை என்பதே என்று அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.

கன்னடத்தில் 'நந்தா', 'ஓடிப்போலாமா' என்ற இரண்டு படங்கள். மலையாளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் 'சைக்கிள்' ஆகிய படங்களைத் தவிர, தமிழில் 'மஞ்சள் வெயில்', 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன. இவையும் விரைவில் வெளிவரவுள்ளன.

இதனால் கவலையாகிப் போன சந்தியா, 'கதை தேர்வு' என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

அதேசமயம், "சம்பளம் எனக்கு முக்கியமில்லை' கதைதான் முக்கியம். அப்படிப்பட்ட கதைகளுக்காக சம்பளத்தை வேண்டுமானாலும் குறைத்துக் கொள்வேன்," என்கிறார்.

மேலும், "நான் தெலுங்கு, கன்னட சினிமாவுக்குப் போய்விட்டேன், தமிழில் நடிக்க வருவது கஷ்டம் என்று வேண்டாத சிலர் பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் வாயை அடைக்கும் விதமாக, பல படங்களில் நடிக்க இருக்கிறேன்' என்கிறார் சாதுர்ய சந்தியா.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விஜய் ஆண்டனியின் தனித்துவம்!
யுவனின் கோலிவுட் பயணம்!
தமிழ்ச் சேவைக்கே முன்னுரிமை : சீமான்
சத்யம் : நயன்தாராவே ஜெயம்!
பாலாவால் வாய்ப்புகள் இழந்த ஆர்யா - பூஜா!
வெங்கட்பிரபு: நிபந்தனைகளின் உச்சம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...