|
| விஜய் ஆண்டனியின் தனித்துவம்! |
இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி வழக்கம்போல் தனது புதிய வரவான 'பந்தயம்' படத்திலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
'டிஷ்யூம்' படத்தில் 'டைலமோ..', 'காதலில் விழுந்தேன்' படத்தில் 'நாக்க முக்க...' போல் இந்தப் படத்திலும் ஒரு பாடலுக்கு முயற்சி செய்திருக்கிறார்.
அதாவது, பாடல்களில் ஏதேனும் வித்தியாசமான வரிகளை (புரியாத வரிகள்) பல்லவியாக வைத்து இசையமைப்பதே இவரது பாணி.
அதோடு, சிலோன் மனோகரின் இரண்டு படங்களை இந்தப் படத்தில் வித்தியாசமான இசை சேர்ப்புடன் ரிமிக்சியில் கலக்கியிருக்கிறார், விஜய் ஆண்டனி. தனது ஒவ்வொரு படங்களிலும் ஒரு புதுப் பாடகரையாவது பாடவைக்கும் இவர், இந்தப் படத்திலும் சிலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இயக்குனரும், நடிகர் விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர் இன்றைய யூத் இயக்குனர்களோடு போட்டி போட்டுக் கொண்டு இயக்கிவரும் படமாகவே 'பந்தயம்' உருவாகி வருகிறதாம்.
சென்னை-28 படத்தில் நடித்த நிதின் சத்யா ஹீரோ மற்றும் பிரகாஷ்ராஜ் முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். வழக்கமாக சந்திரசேகரின் படத்தில் விஜய் ஒரு சின்ன கேரக்டரிலாவது நடிப்பார். ஆனால், இந்தப் படத்தில் நடிக்கவில்லை. காரணம் அடுத்து விஜயை வைத்து ஒரு ஆக்சன் படத்தை இயக்கவிருக்கிறார் எஸ்.ஏ.சி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|