யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
பாலாவால் வாய்ப்புகள் இழந்த ஆர்யா - பூஜா!
என்னதான் ஒரு வருடத்தில் படம் முடித்துக் கொடுக்கிறேன் என்று பாலாவிடம் ஒப்பந்தம் வாங்கினாலும், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் படத்தை முடித்துக் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார் பாலா.

'நான் கடவுள்' படத்திற்கும் அப்படித்தான் ஓராண்டுக்குள் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று எழுதிக் கொடுத்தார். ஆனால் இரண்டு ஆண்டுகள் முடிந்தும் படப்பிடிப்பு இன்னும் பாக்கியிருக்கிறது.

இதனால் பெரிய இழப்பு படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டும் இல்லாமல், அதில் நடிக்கும் ஆர்யா மற்றும் பூஜாவுக்கும்தான்.

ஆர்யாவுக்கு கிட்டத்தட்ட தமிழில் மட்டும் நான்கு படங்கள் நடிக்கும் வாய்ப்பு வந்தும், பாலாவிடம் ஆரம்பத்தில் ஒத்துக்கொண்டபடி வேறு படங்களில் நடிக்க முன்வரவில்லை. இதனால் பல லட்சங்கள் இழப்பு. இவருக்கு நான்கு படம் என்றால், பூஜாவுக்கு பல மொழிகளில் கிட்டத்தட்ட பதினைந்து படங்களின் வாய்ப்புகளை இழந்திருக்கிறார்.

இதுபற்றி பாலாவிடம் கேட்டபோது, என் படத்தில் ஹீரோ - ஹீரோயினாக நடிப்பது என்றால் சும்மாவா... நூறு படங்களில் கிடைக்கும் பேரும் புகழும் என் ஒரே படத்தில் பெற்றுவிடுவார்கள் என்ற மார்தட்டுகிறார்.

ஆனாலும், ஒரு படத்துக்கு மூன்று ஆண்டுகள் படப்பிடிப்பு மட்டுமே நடத்துவதை கடவுள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சத்யம் : நயன்தாராவே ஜெயம்!
வெங்கட்பிரபு: நிபந்தனைகளின் உச்சம்!
அசினுக்கு ஏங்கும் கோலிவுட்!
'ஆரோக்கிய' போட்டியில் நமீதா - நிலா!
கலக்கும் கலாபவன் மணி
தங்கர் பச்சனின் தன்னம்பிக்கை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...