யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'ஆரோக்கிய' போட்டியில் நமீதா - நிலா!
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தெலுங்கில் வெளியாகி, பின் தமிழில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஜகன்மோகினி.

ஜெயமாலினியும், நரசிம்மராஜும் இணைந்து நடித்த படம். குடும்பம் குடும்பமாக பிள்ளைக் குட்டிகளோடு சென்று பார்த்த படம். விட்டலாச்சார்யா இயக்கியிருந்தார். தற்போது அதே பெயரில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான ஸ்டில்களும், செய்திகளும் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டிக் கொண்டே போகிறது. அதோடு, பழைய ஜகன்மோகினியில் ஜெயமாலினி கேரக்டரில் நம்ம நமீதா நடிக்கிறார் என்றால் சும்மாவா. நாயகனாக நடிக்கும் ராஜாவுக்கு ஜோடியாக நிலா நடிக்கிறார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்தப் படத்தில் ஜெயமாலினி கவர்ச்சியில் தூள் கிளப்பியிருப்பார். அப்படியிருக்க, இந்த புதிய ஜகன்மோகினியில் நமீதா தாராளமயமாக்கல் கொள்கையை கடைப்பிடிக்காமலா போய்விடுவார்.

நிலாவும் போட்டி களத்தில் இறங்குவதால், நமீதா வெகுண்டெழுவார் என்பதில் ஐயமில்லை.

நமீதாவின் அம்மாவாக நடிக்க ஜெயமாலினியை கேட்க, அவர் ஒத்துக் கொள்ளாத காரணத்தால் அவருக்கு பதிலாக முன்னாள் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி நடிக்கிறார்.

பழைய படத்திற்கும், இந்தப் படத்திற்கும் கதையில் நிறைய வித்தியாசம் செய்திருக்கிறோம். அதனால், அதைவிட இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்கிறார் இப்பட இயக்குனர் என்.கே. விஸ்வநாதன்
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கலக்கும் கலாபவன் மணி
தங்கர் பச்சனின் தன்னம்பிக்கை!
சர்ச்சை காட்சிகள் நீக்கம்: ரசிகர்களுக்கு ஆறுதல் தந்த ரஜினி
நடிப்பைத் தொடர திருமதியாகிய பாரதி முடிவு
'மர்மயோகி'யில் தொடரும் மர்மம்!
ரீ ஷூட் ஆகிறது 'சக்கரக்கட்டி' பாடல்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...