|
| கலக்கும் கலாபவன் மணி |
இயக்குனர் சரண் இயக்கும் மோதி விளையாடு படத்திற்காக மலேசியா, கோலாலம்பூர் ஆகிய நாடுகளில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது வித்தியாசமான, அதே சமயம் காதல் கலந்த படமாக இருக்கும் என்கிறார் சரண்.
வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் கண்டு கலங்காமல் அதனை மோதி ஜெயிப்பது தான் இப்படத்தின் கதையாம். இப்படத்தின் நாயகன் வினய் காதலுக்காக எதிரிகளிடம் மோதுகிறார். இறுதியில் அவர் எப்படி ஜெயித்தார் என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ். வினய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
மலேசியா, சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடத்தினாலும், சென்னையில் படப்பிடிப்பு நடத்துவது போல் தான் இருந்தது. சென்னையில் எவ்வளவு சுதந்திரமாக படப்பிடிப்பு நடத்த முடியுமோ அதே போல் மலேசியா, சிங்கப்பூரையும் காமிராவில் பதிவு செய்துள்ளதாக இயக்குனர் சரண் தெரிவித்தார்.
சரணின் ஜெமினி, ஜேஜே உள்ளிட்ட படங்களில் தனது வித்தியாசமான நடிப்பு, மேனரிஸம் மூலம் கலக்கிய கலாபவன் மணி, இப்படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பால் மக்கள் மனதில் இடம்பிடிப்பார் என சரண் அடித்துச் சொல்கிறார்.
கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதால் டிசம்பர் அல்லது ஜனவரியில் படம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் சரண்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|