|
| 'நாக்க முக்க...'வில் குத்தாட்டமிடும் நமீதா! |
''ஓ... போடு,' 'மன்மதராசா...' வகையறா பாடலாக, 'காதலில் விழுந்தேன்' படத்தின் 'நாக்க முக்கா...' என்ற குத்தப்பாட்டு, படம் வெளிவருவதற்கு முன்னரே குக்கிராமங்களிலும் கூட முணுமுணுக்கப்பட்டு வருகிறது.
விஜய் ஆண்டனி இசையமைத்த இந்தப் பாடல், தமிழ் தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களில் நீங்கா இடம்பிடித்து, குத்தாட்டங்கள் அரங்கேற காரணாமாகியுள்ளது.
'நாக்க முக்க...' அடைந்துள்ள மலைக்கவைக்கும் பிரபலம், அந்தப் பாடலை நமீதாவை வைத்துப் படமாக்க வைத்துள்ளது.
இதிலென்ன அதிசயம்..? குத்துப்பாட்டுக்கேற்ற குலவிளக்கல்லவா நமீதா! என ரசிகர்கள் கேட்கலாம்.
ஆனால், 'நாக்க முக்க' பாடல் ஏற்கெனவே நாயகன் நகுலை வைத்து, சென்னைத் தீவுத்திடலில் படமாக்கப்பட்டுவிட்டது.
எள்ளளவு எதிர்பார்க்கப்பட்ட இப்பாடல், கடலளவு பிரபலமாகியிருப்பதால், பாடலைக் கேட்கும்போது பெற்ற இன்பத்தைவிட, அதைப் பார்க்கும் போது ரசிகர்களிடையே மேலும் ஆரவாரம் பொங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு (?!) தான், ஏற்கெனவே எடுக்கப்பட்ட பாடல் காட்சியை மூட்டைக்கட்டி ஓரமாக வைக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது.
எனவேதான், புத்தம் புதிதாக 'நாக்க முக்க' பாடலுக்கு குத்தாட்டமிட நமீதா அணுகப்பட்டுள்ளார்.
நமீதாவின் கலைச் சேவை தொடரட்டும்!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|