|
| ஷங்கரின் 'ரோபோ' நாயகன் விக்ரம்? |
| 7 ஜூலை 2008 ( 16:29 IST ) | |
கதை, திரைக்கதை, கதாப்பாத்திரங்கள் என அனைத்திலும் எப்போதும் தெளிவுடன் இருக்கும் இயக்குனர் ஷங்கருக்கு, தனது கனவு படமான 'ரோபோ'வில் யாரை நாயகானாக்குவது என்ற குழப்பம் மட்டும் நீங்குவதாக இல்லை.
தொடக்கத்தில் கமலஹாசன் நடிப்பதாக இருந்த ரோபோ, 'சிவாஜி'க்கு பிறகு ரஜினி நடிப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், 'ரோபோ' படத்தில் விக்ரம் நடிப்பதாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆயினும், ரஜினி சொல்லும் முடிவில் தான் 'ரோபோ' தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.
தற்போது வியட்நாம், தென் ஆப்பிரிக்கா, சுவிட்ஸர்லாந்து என ஒளிப்பதிவாளருடன் 'ரோபோ'வுக்காக பறந்துகொண்டிருக்கிறார் ஷங்கர்.
இப்படத்தை முடிக்க, குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகும். 'சிவாஜி'க்கே இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதைவிட பல மடங்கு பிரம்மாண்டமான படைப்பு என்பதால், 'ரோபோ' முடிவதற்கு மேலும் அதிக நாட்கள் தேவையிருக்கும். இப்போதே, செய்துவரும் செலவுக்காக தயாரிப்பாளர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்.
மூன்று கோடிகளுக்குள் முழு படத்தையும் எடுப்பது, தனது 'எஸ்' பிக்சர்ஸில் மட்டும்தான் என்ற கொள்கையில் பிடிப்புடன் இருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர்!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|