யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
தயார்ப்பாளர் சங்க தலைவராக ராம.நாராயணன் மீண்டும் தேர்வு
சென்னை (ஏஜென்சி), 7 ஜூலை 2008   ( 12:56 IST )
தமிழ் திரைப்பதயாரிப்பாளர்கள் சங்க தலைவராக, ராம.நாராயணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடத்தில் நேற்று மாலை 4 மணி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டு இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, ராம.நாராயணன் மீண்டும் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 394 ஓட்டுகள் பெற்ற அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பஞ்சு அருணாசலத்தை 256 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவரது தலைமையிலான அணியினர் அனைவருமே வெற்றிபெற்றனர்.

தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவிக்கான தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராதிகா சரத்குமாரை, ராம.நாராயணன் அணியின் சிவசக்தி பாண்டியன் தோற்கடித்தார்.

துணைத்தலைவர்களாக அன்பாலயா பிரபாகரனும், எஸ்.ஏ.சந்திரசேகரனும் தேர்வு செய்யப்பட்டனர்; மற்றொரு செயலாளராக கே.முரளிதரனும், பொருளாளராக காஜாமைதீனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த வெற்றிக்குப் பிறகு, ராம.நாரயாணன் அணியினர் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரபுவின் அரசியல் அவதாரம்
'ஆட்டோகிராப்-2'ல் உதயதாரா
'உளியின் ஓசை': தப்பினார் தயாரிப்பாளர்
மீண்டும் இணைந்த சிம்பு-நயன்தாரா
சாதனைப் படைத்த 'குசேலன்' பாடல்கள்!
இந்திரலோகத்தில் மன்மதன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...