|
| பிரபுவின் அரசியல் அவதாரம் |
மார்க்கெட் போனதும் அரசியல்வாதி அவதாரம் எடுக்கும் நடிகர்கள் பட்டியலில் லேட்டஸ்ட்டாக இடம் பிடிக்கவுள்ளார் பிரபு.
பிரபுவின் அரசியல் பிரவேசம் பற்றி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே ராம்குமார் பேச ஆரம்பித்தாலும் அதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், சமீபகாலமாக பிரபுவே இதுகுறித்து பேசி வருவது தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பார்வர்டு பிளாக் கட்சியிலிருந்து கார்த்திக் நீக்கப்பட்டதும் அந்த இடத்துக்கு பொருத்தமானவர் என முக்குலத்தோரின் நினைவுக்கு வந்தவர் பிரபுதான்.
தற்போது பிரபு ஓ.கே. சொன்னால் போதும், அந்த பதவியை தாரைவார்க்க தேசிய தலைவர்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.
அரசியலுக்கு வருவதன் மூலம், தற்போது நட்பு வட்டாரத்தில் இருக்கும் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா, போன்ற பெரிய தலைகளை பகைக்க வேண்டியது வருமோ என்பதுதான் பிரபுவின் ஒரே தயக்கம்.
என்றாலும், சினிமா வாய்ப்புகளும் இல்லாத நிலையில் சிவாஜி குடும்பத்துக்கு ஒரு பவர் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் பிரபு அரசியலில் இறங்க ஆயத்தமாகி வருகிறாராம்.
அக்டோபர் 1ம் தேதி, சிவாஜியின் 80வது பிறந்த நாள். அன்றைய தினத்தில் பிரபு அரசியல்வாதியாக அரிதாரம் பூசுவது உறுதி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|