|
| ரஜினி, மணிரத்னம் படத்தில் ப்ரியாமணி |
தமிழ் சினிமாவின் இன்றைய அதிர்ஷ்ட தேவதை ப்ரியாமணிதான். பின்னே, ஒரே நேரத்தில் தேசிய விருது, ஷங்கர், மணிரத்னம் படங்களில் வாய்ப்பு என்றால் சும்மாவா...?
தமிழ் சினிமாவில் பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த ப்ரியாமணி, 'பருத்திவீரனு'க்கு பின்பு புகழின் உச்சிக்குப் போனார்.
படவாய்ப்புகளும் அதிகளவில் குவிந்ததோடு, கடந்தவாரம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்கும் ப்ரியாமணி, அதிலிருந்து இன்னும் விடுபடாத நிலையில், இதோ மீண்டும் ஒரு அதிர்ஷ்டம் அவர் வீட்டுக் கதவை தட்டியிருக்கிறது.
அதாவது, 'ரோபோ' படத்தில் நடிக்க ப்ரியாமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கோடம்பாக்கத்தில் செய்தி பரவிக் கிடக்கிறது. நாயகி ஐஸ்வர்யா தவிர, மற்றொரு வேடமும் இருக்கிறது. இதில் நடிக்கத்தான் ப்ரியாமணிக்கு அழைப்பாம்.
இது தவிர, மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கவும் ப்ரியாமணிக்கு அழைப்பு வந்திருக்கிறதாம்.
இதனால், மகிழ்ச்சி வானில் சிறகடித்து பறந்துக் கொண்டிருக்கிறார் இந்த அதிர்ஷ்ட தேவதை!.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|