|
| 'ராஜ்'யத்தை மகிழ்வித்த ரஜினி! |
| திங்கள்கிழமை, 16 ஜூன் 2008 ( 16:00 IST ) | |
அண்மையில் அமிதாப் பச்சனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய சம்பவங்களில் ரஜினிகாந்தின் பாராட்டும் ஒன்று.
ராம் கோபால் வர்மாவின் 'சர்க்கார்' படத்தின் இரண்டாம் பாகம்தான் 'சர்க்கார் ராஜ்'.
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்த இப்படம் வெளியான சில தினங்களில் ரஜினிகாந்த் ரசித்துள்ளார்.
உடனடியாக, "இதுவரையான உங்கள் நடிப்பில் இதுதான் டாப்" என்று அமிதாப்பை வாயாரப் புகழ்ந்துள்ளார் ரஜினி.
இதில் மகிழ்வுற்ற அமிதாப், "ரஜினி போன்ற ஒரு நடிகரின் பாராட்டு மிக மிக முக்கியமானது" என்று நெகிழ்ந்திருக்கிறார்.
'சிவாஜி'யைக் கண்டு ரசித்து, உடனடியாக தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்த நட்சத்திரங்களில் அமிதாப் பச்சனும் ஒருவர் என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.
இதனிடையே, 'சர்க்கார் ராஜ்' படத்தை பிரபலப்படுத்துவதற்காக ஹைதராபாத் வந்த அமிதாப் பச்சனிடம், "உங்களுக்கு இன்னும் ஏதேனும் ஒரு கனவு கதாப்பாத்திரம் உள்ளதா?" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, "எதிர்காலத்தில் எனக்கான கதாப்பாத்திரங்கள் என்னென்ன இருக்கின்றன என்பது எனக்கு தெரியாது. ஆனால், ஒரு நடிகராக எனக்கு சவால் நிறைந்த கதாப்பாத்திரங்கள் இருக்கவே செய்யும்" என்றார் அமிதாப்!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|