|
| ' தசாவதாரம்' ஓபனிங் சூப்பர் ' |
| சனிக்கிழமை, 14 ஜூன் 2008 ( 18:32 IST ) | |
கமலஹாசனின் தசாவதாரம், ஓபனிங் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டதால், சென்னையில் நேற்று அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல்.
முன்பதிவு செய்ய வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு திரையரங்கிலும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். தடியடி நடத்த வேண்டிய அளவுக்கு பெரும் கூட்டம்.
"சென்னையில் மட்டும் 21 தியேட்டர்ல தசாவதாரம் ரிலீஸாயிகியிருக்கு. அப்படியும் கூட்டத்துக்கு குறைவில்லை. அமேசிங் ஓபனிங். ஆறு நாட்களுக்கான ரிசர்வேஷன் ஏற்கனவே முடிஞ்சிருச்சி" என்றார் சென்னை கமலா திரையரங்கு உரிமையாளர் வள்ளியப்பன்.
"சும்மா வந்துபோற நடிகர்களுக்கிடையில் கமலின் உழைப்பும் நடிப்பும் பிரமிக்க வைக்குது. இதில் வில்லனாக வர்ற வெள்ளைக்கார கமலைப் பாருங்க. எந்த இடத்திலாவது கமலோட ஜாடை, மேனரிஸம் ஏதாவது தெரியுதா? உண்மையிலேயே ஃபென்டாஸ்டிக் மூவி" என்றார் வள்ளியப்பன்.
வெளியே நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்தபோது, தமிழ் சினிமா சரித்திரத்தில் தசாவதாரம் சாதனை படைக்கும் என்ற அவரது வார்த்தை உண்மையாகும் என்றே தோன்றியது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|