|
| திரையில் 'தசாவதாரம்'; திருவிழா உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்! |
| வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2008 ( 12:20 IST ) | |
'தசாவதாரம்'... கமலஹாசன் ரசிகர்களின் இரண்டாண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வந்தது; தடைகள் பல கடந்து வெள்ளித்திரைக்கு விஜயம் செய்துள்ள கமலின் பத்து அவதாரங்களைக் தரிசிப்பதற்கு, உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் திரையரங்குகளை முற்றுகையிட்டுள்ளனர்.
'பாலாபிஷேகம், கட் அவுட்டுக்கு தோரணங்கள் போன்றவை வேண்டாமே' என ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை இட்ட போதிலும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள திரையங்குகளின் வாயிலில் பட்டாசுச் சத்தங்கள்!
இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் (சுமார் ரூ.130 கோடி), உலக அளவில் ஒரே படத்தில் நடிகர் ஒருவர், 10 வேடங்களில் தோன்றிய படம், இந்தியத் திரைப்படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான பிரின்டுகள் (1,000) போடப்பட்ட படம்...
இத்தகைய சிறப்புகள் பல கொண்ட இப்படம், கடந்து வந்த பாதை, சற்று மலைப்பை ஏற்படுத்தினாலும், சென்னை திரையரங்குகளில் முதல் 25 நாட்களுக்கு அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்ய்ப்பட்டிருப்பது 'தசாவதாரம்' படக்குழுவை மட்டுமின்றி, கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
'கதைத் திருடப்பட்டது', 'படத்தின் தலைப்பு' போன்ற வழக்குகளுக்கு இழுத்தடிக்கப்பட்ட 'தசாவதாரம்', கடைசியில் 'சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே சண்டை மூட்டும் வகையில் உள்ளது' என உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகளைச் சந்தித்தது. இடையில், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் 'ஆஸ்கார்' நிறுவன முத்திரை விவகாரம் வேறு.
இப்படி பல சர்ச்சைகளைச் சந்தித்து, அவற்றில் இருந்து மீண்டு வெளிவந்திருக்கும் 'தசாவதாரம்' படத்தில், கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.25 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒரே காரில் 5 கமலஹாசன் இணைந்து வரும் காட்சி, இப்படத்தின் ஹைலட்களில் ஒன்று!
'ஹேராம்', 'ஆளவந்தான்' போன்ற பரீட்சைகளில் தோல்வியுற்ற கமலஹாசன், 'தசாவதாரம்' பலப்பரீட்சையில் ஜெயித்துவிடுவார் என்றே ரசிகர்கள் நம்புகின்றனர்.
கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கம், தென்னகத்து அசின், வடக்கத்திய மல்லிகா ஷெராவத் போன்ற கூட்டணிகள் படத்துக்கு வலு சேர்த்துள்ளதாக தெரிகிறது.
தசாவதாரத்தின் இந்திப் பதிப்பு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
"படம் எப்படி இருந்தாலும் கவலையில்லை. கமலின் 10 வேடங்களைப் பார்ப்பது மட்டுமே போதும்" என்று கூறியபடி சென்னை - தேவி தியேட்டருக்குள் நுழைகிறார், கமலஹாசனின் தீவிர ரசிகர் ஒருவர்!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|