|
| பாலாபிஷேகம் வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் அறிவுறுத்தல் |
'தசாவதாரம்' பட ரிலீஸின்போது, கட் அவுட் அலங்காரம், பாலாபிஷேகம் போன்ற களேபரங்களைச் செய்யக் கூடாது என்று தனது ரசிகர்களுக்கு கமலஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த 'தசாவதாரம்' படம், திட்டமிட்டபடி நாளை (ஜூன் 13) வெளியாகிறது.
இதையொட்டி, கமலஹாசன் சாரிபில் கமல் நற்பணி மன்றத் தலைவர் குணசேகரன், அனைத்து மன்றங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதன் சாராம்சம், தசாவதாரத்தை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதே.
அதன்படி, தியேட்டர்களில் தோரணம், கட் அவுட், பாலாபிஷேகம், பீராபிஷேகம் என எதுவும் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கமலின் விருப்பத்துக்கேற்ப நற்பணிகளை மட்டுமே மேற்கொள்வது என்று அவரது நற்பணி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.
ஆனால், ரசிகர்கள் நாளை தங்களது கொண்டாட்டத்துக்கு அணை போடுவார்களா என்பது சந்தேகமே!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|