யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
`தசாவதாரம்' படத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 12 ஜூன் 2008   ( 15:33 IST )
கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் பி.பி.நவ்லேகர் தலைமையிலான பெஞ்ச், "மனுதாரர்கள் முதலில் படத்தை முழுமையாக பார்க்க வேண்டும். அதன் பிறகே முறையிட வேண்டும்" என்று அறிவுறுத்தி, இப்படத்துக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'தசாவதாரம்' பட முன்னோட்டக் காட்சிகள் வெளியானதன் அடிப்படையில், இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

இதைத் தொடர்ந்து, 'தசாவதாரம்' நாளை (ஜூன் 13) திட்டமிட்டபடி வெளியாகும் என்பது உறுதியானது.

முன்னதாக, 'தசாவதாரம்' படத்துக்கு எதிராக `இன்டர்நேஷனல் ஸ்ரீவைஷ்ணவ தர்மா சம்ரட்சணா' சங்கம் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதைத் தொடர்ந்தே, சென்னையைச் சேர்ந்த ஆர்.பக்தவச்சலம் மற்றும் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசா ஆகியோரால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அம்மனுவில், இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது என்றும், சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையிலான மோதலை சித்தரிப்பதாக இந்தப் படம் அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையேயான மோதலை சித்தரிக்கும் காட்சிகளையும், மத உணர்வுகளை புண்படுத்தும் வேறு சில காட்சிகளையும் நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் அம்மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
12 மணி நேர சம்பவம் 'குடியரசு'
ஷகீலாவுக்கு கல்யாணம்
சேனல் யுத்தத்தில் 'ஸீ' டிவி
எம்ஜிஆரின் கார் நம்பர் புதுப்பட தலைப்பானது
அமீருக்கே சமர்ப்பணம்: பிரியாமணி பரவசம்
'பராசக்தி' பட பாடல் ரீமிக்ஸ் ஆகிறது!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாண்டி
தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'...
காதல் என்றால் என்ன
அரசாங்கம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்...
மேலும் படிக்க|மேலும்...