|
| அமீருக்கே சமர்ப்பணம்: பிரியாமணி பரவசம் |
தனக்கு கிடைத்த தேசிய விருதையும், அதனால் கிடைத்த புகழையும், இயக்குநர் அமீருக்கே சமர்ப்பணம் செய்வதாக நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார்.
இயக்குனர் அமீரின் 'பருத்தி வீரன்' படத்தில் நடிகை ப்ரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. விருது பெற்றது குறித்து ப்ரியாமணி கூறியதாவது:
பருத்தி வீரன் வெளியானபோதே எனக்கு விருது கிடைக்கும் என்றார்கள். இதனால் நானும் எதிர்பார்த்தேன். ஆனால், விருது கிடைத்ததை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை.
இந்த விருதுக்கு காரணம் இயக்குனர் அமீர்தான். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதைப் போல, பருத்தி வீரன் கிடைத்த விருது, புகழ் எல்லாவற்றையும் இயக்குனர் அமீருக்கே சமர்ப்பணம் செய்கிறேன்.
படத்தில் அமீர் சொன்னதை செய்தேன். அது இவ்வளவு பெரிய வெற்றியை தேடிதந்திருக்கிறது. இந்த வேடத்துக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து அப்போதே என்னை சொந்தக் குரலில் பேச உற்சாகப்படுத்தினார் அமீர். அவருக்கும், படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழிற்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுதவிர, சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய குரு பாரதிராஜா மற்றும் பாலுமகேந்திரா ஆகியோருக்கும் எனது நன்றி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|