|
| கார்ப்பரேட் நிறுவனங்களைக் கண்டு அஞ்சாதீர்: கமலஹாசன்
|
| 7 ஜூன் 2008 ( 16:51 IST ) | |
கார்ப்பாரேட் நிறுவனங்களைக் கண்டு தமிழ் திரையுலகினர் அஞ்ச வேண்டாம் என்று நடிகர் கமலஹாசன் கூறினார்.
வினய், பாவனா நடிக்கும் 'ஜெயம் கொண்டான்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் பேசுகையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் படையெடுப்பால், தயாரிப்பாளர்கள் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வருத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய கமலஹாசனோ, "சினிமாவில் அனுபவம்தான் முக்கியம். அப்படிப்பட்டவர்களைத்தான் நாடிச் செல்வோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்தாலும் அனுபவம்தான் முக்கியமாக கருதப்படும். அனுபவம் உள்ளவர்களின் வாரிசுகள் தான் சினிமாவில் ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்.
எனவே, கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டு அஞ்ச வேண்டியது இல்லை. சினிமா நம் வீடு. குப்பைகள் இருந்தால் நாம்தான் அகற்ற வேண்டும். குழப்பம் அடைய தேவை இல்லை. சங்கடங்கள் ஏற்பட்டால் உதவி செய்ய முதல்வர் இருக்கிறாரே" என்றார்.
ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கிய இவ்விழாவில், இயக்குனர் மணிரத்னம், நடிகர் ஜெயம் ரவி, கே.ஆர்.ஜி. ராமநாராயணன், நடிகை பாவனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|