|
| சிவாஜியை மிஞ்சும் 'தசாவதாரம்'! |
பல்வேறு தடைகளை தாண்டி, வரும் 13ம் தேதி ரிலீசாகும் 'தசாவதாரம்', 'சிவாஜி'யின் சாதனையை முறியடிக்கிறது என்பதுதான் கோடம்பாக்கத்தில் ஹை லைட்.
அதாவது, பெரும் எதிர்பார்ப்புடன் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆன 'சிவாஜி', சென்னையில் 14 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆனது.
ஆனால், சத்யம், தேவி, அபிராமி, சங்கம், ஐநாக்ஸ், ஆல்பட், உட்லண்ட், உதயம், கமலா, ஏ.வி.எம். ராஜேஸ்வரி, மகாராணி, பிரார்த்தனா, மாயாஜால், ரோகிணி உள்பட சென்னை நகரில் மட்டும் 20 தியேட்டர்களில் 'தசாவதாரம்' திரையிடப்படுகிறது.
புறநகர் பகுதிகளான அம்பத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் 30 தியேட்டர்களிலும் சேர்த்து ஆக மொத்தம் சென்னையில் 50 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
இதனால் எக்கச்சக்க உற்சாகத்தில் இருக்கும் கமல் ரசிகர்கள், படம் ரிலீசாகும் தியேட்டர்களை இப்போதே அலங்கரிக்க தயாராகி விட்டனர்.
இதுதவிர, கமலின் பத்து வேடங்களையும் பத்து விதமான வண்ண போஸ்டர்களில் அச்சிட்டு வருகிறது ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம். இப்படத்துக்கு 1000 பிரிண்ட்கள் போடப்படுகின்றன. இதற்கான பணி இரவு -பகலாக நடக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|