|
| ஜூலை 6ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்
|
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்தமாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.
சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் சங்கத் தலைவர் இராம. நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் 16ம் தேதி முதல் வழங்கப்படும். 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை மனுத்தாக்கல் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்குள் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
26ம் தேதி மாலை 5 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலையே இறுதிப் பட்டியல் அறிவிக்கப்படும். ஜூலை 6ம் தேதி தேர்தல் நடைபெறும். அன்று இரவே புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பார்கள்.
புதிதாக படம் தயாரிப்பவர்கள் வரும் 15ம் தேதிக்குள் உறுப்பினராக பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|