|
| இசைஞானிக்கு வயது 65! |
தனது 65வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.
கடந்த 1976ல் 'அன்னக்கிளி' மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, இன்று வரை தனது இன்னிசையால் உலகளவில் ரசிகர்களை மயங்க வைத்துக்கொண்டிருப்பவர். வெகு விரைவில் 1000வது படத்தை தொடவுள்ளார்.
தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் சேர்த்து, இளையராஜா இதுவரை இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும்.
இவரது 'சிம்பொனி' இசை உலகளவில் தமிழர்களுக்கு பெருமை பெற்று தந்த நிலையில். சமீபத்தில், திருவாசகத்தை ஒரடோரியா என்ற இசை வடிவில் கொடுத்து, சத்தமே இல்லாமல் புதிய சாதனை படைத்திருக்கிறார் இளையராஜா.
வழக்கம் போல எளிமையான முறையில் இளையராஜா நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினாலும், 'கலைஞர் டிவி' தனது 'இசையருவி' மூலம் இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி மற்றும் பாடல்களை நேற்று முழுவதும் ஒளிபரப்பி உலகளவில் பிரபலப்படுத்தி விட்டது. இதனால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துகொண்டே இருந்தன.
இதுதவிர, இசைஞானியின் இசையில் உருவான கலைஞரின் 'உளியின் ஓசை' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்று நடந்தது. இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் நடந்த இந்த விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்துக்கொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|