யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
இந்தி சினிமாவை பின்பற்ற வேண்டும் : ஜீவா
இந்தி திரைப்படங்களைப் போல தமிழிலும் ஒரே படத்தில் பெரிய கதாநாயகர்கள் பலரும் இணைந்து நடிக்க வேண்டும் என நடிகர் ஜீவா விருப்பம் தெரிவித்துள்ளார்.

'தெனாவட்டு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,"இந்திப் படங்களில் இருப்பது போல பல ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் சூழல், தமிழிலும் வருவது மகிழ்ச்சிக்குரியது. அப்படியொரு படத்தில் நானும், ஜெயம் ரவியும் இணைந்து நடிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

வி.வி.கதிர் இயக்கிய 'தெனாவட்டு' படம் பற்றி கூறிய அவர், முதல்நாள் சண்டை காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்த பெயின்ட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அதன்பின் சுவர் ஏறி குதித்து உயிர் தப்பினோம். இப்படத்தில், அரவாணிகளின் கூவாகம் விழாவை பதிவுசெய்துள்ளோம்'' என விவரித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, "என்னிடம் இருந்த இரண்டு ஹீரோ சப்ஜெட் கதையை ஜீவாவிடம் சொன்னேன். அதைப் பொறுமையுடன் கேட்டதோடு, அதில் நடிக்கவும் அவர் ஒப்புக்கொண்டார்" என்றார்.

இயக்குனர்கள் சீமான், பேரரசு, சுப்ரமணியம் சிவா, நடிகர்கள் ஜீவன், ரமேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜூலை 18-ல் 'குசேலன்' ரிலீஸ்!
வித்யாபாலனுக்காக 'வியூகம்' வகுக்கும் நடிகர்!
மிஷ்கின் இயக்கத்தில் சூர்யா!
சூப்பர் கிங்ஸ் விவகாரம் : மெளனம் கலைத்த நயன்தாரா!
'ரோபோ' வில்லன் சக்கரவர்த்தி!
'தசாவதாரம்' படத்துக்கு எதிராக வழக்கு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace