|
| 'தசாவதாரம்' படத்துக்கு எதிராக வழக்கு |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008 ( 18:16 IST ) | |
கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள 'தசாவதாரம்' படத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இந்து அமைப்பு ஒன்று தாக்கல் செய்துள்ள மனுவில், 'தசாவதாரம்' படத்தில் சைவ, வைணவ மதங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் காட்சிகள் உள்ளதால், அதனை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மனுவை விசாரித்த விடுமுறைக்கால நீதிபதிகள் ராஜசூர்யா, சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு 'தசாவதாரம்' இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் தணிக்கைக் குழு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
முன்னதாக, 'கோவிலில் இருந்த சாமி சிலைகள் சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை 'தசாவதாரம்' படத்தில் இருந்து நீக்கவில்லை என்றால், அப்படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிட விடமாட்டோம்' என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் விளக்கம்
தற்போது 'தசாவதாரம்' படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனை தொடர்பாக பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், "இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவுமில்லை. எனவே, எந்தக் காட்சியையும் நீககவேண்டிய அவசியம் இல்லை. இப்படம், நாத்திகனை ஆத்திகனாக்கும் படம்" என்று விளக்கியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|