|
| `தசாவதாரம்' படத்துக்கு எச்சரிக்கை! |
| செவ்வாய்கிழமை, 6 மே 2008 ( 10:45 IST ) | |
கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால், தமிழகத்தில் அப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று இந்து முன்னணி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
`தசாவதாரம்' திரைப்படத்தில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். அப்போது, கோவிலில் இருந்த சாமி சிலைகள் சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை அவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது.
இதன்மூலம் இந்து சமுதாயத்தை மேலும் பலவீனமாக்க முடியும் என்பதால் முதல்வர் கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியடைந்து, தன்னால் செய்ய முடியாததை கமலஹாசன் மூலம் சாதிக்க முயலுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவில்லை என்றால், `தசாவதாரம்' திரைப்படத்தை பக்தர்கள், பொதுமக்கள் துணைகொண்டு, அவர்கள் தலைமையில் இந்து முன்னணி போராடி தடுக்கும். தமிழகத்தில் எங்கும் திரையிட விடமாட்டோம் என்றும் எச்சரிப்பதாகவும் இந்து முன்னணி அமைப்பாளர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|