|
| சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), 31 ஜனவரி 2008 ( 17:57 IST ) | |
சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கும்போது 51 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய நிலையில், 17,810 ஆக காணப்பட்டது.
அதன் பின்னர் முன்னணி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால், சென்செக்ஸ் புள்ளிகளில் சரிவு ஏற்படத்துவங்கியது.
இந்நிலையில், வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் இன்றைய வர்த்தகத்தின் அதிகபட்ச சரிவாக 392 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,418 என்ற நிலைக்கு சென்றது.
இந்நிலையில் மாலையில் வர்த்தகம் முடிவடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக புதிதாக பங்குகள் வாங்கப்பட்டதால், சென்செக்ஸ் புள்ளிகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிந்து 17,649 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிப்டி 30 புள்ளிகள் சரிந்து 5,137 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பிரிவோம் சந்திப்போம் | | அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|