|
| சென்ட்ரல் வங்கியின் நிகர லாபம் 50 சதவீதம் அதிகரிப்பு |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜனவரி 2008 ( 17:38 IST ) | |
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2007 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டு இறுதியில், இவ்வங்கிக்கு கிடைத்த நிகர லாபம் 201.01 கோடி ரூபாயாகும்.
அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் கிடைத்த 134.10 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 49.9 சதவீதம் அதிகமாகும்.
அதேபோன்று மொத்த வருவாயும் 2,205.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த 2006 ம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் கிடைத்த மொத்த வருவாய் 1,687.2 கோடி ரூபாயாகும்.
இத்தகவலை மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கை ஒன்றில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பிரிவோம் சந்திப்போம் | | அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|