|
| டாடாவுக்கு போட்டியாக ஹூண்டாய் மினி கார் | |
டாடாவின் ஒரு லட்ச ரூபாய் விலையுள்ள புதிய நானோ காருக்கு போட்டியாக, குறைந்த விலையில் மினி காரை அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டாடா சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஒரு லட்சம் ரூபாய் விலையுள்ள நானோ கார், நடுத்தர வர்த்தகத்தினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ரக காரினால்,தங்களது நிறுவன தயாரிப்பு கார்களின் விற்பனை பாதிக்கப்படுமோ என பிற கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே ஒரு வித அச்சம் எழுந்துள்ளது.
இருந்த போதிலும் அப்போட்டியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் அந்நிறுவனங்கள் மேற்கொள்ள துவங்கிவிட்டன.
இதன் துவக்கமாக இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் கம்பெனி, விரைவிலேயே குறைந்த விலையுடைய மினி காரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் விலை சுமார் 3,700 அமெரிக்க டாலர்களாக (ஏறக்குறைய ரூ.1 லட்சத்து 40 ஆயிரம்) இருக்கும் என்று ஹூண்டாய் நிர்வாக துணைத் தலைவர் சோ வோன் - சுக் அவர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் , தென்கொரியாவில் இந்த ரக கார்களை தயாரிக்கும் திட்டம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலுநம் இந்த மினி ரக காரை தவிர, ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிக்கும் திட்டமும் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
சிறிய ரக கார் அதிகம் விற்பனையாகும் இந்திய கார் சந்தையின் 50 சதவீத விற்பனையை தக்க வைத்துள்ள ஹூண்டாய் நிறுவனம், சர்வதேச அளவில் விற்பனையில் ஆறாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது !
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பிரிவோம் சந்திப்போம் | | அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|