|
| ஐந்தே நிமிடத்தில் மணியார்டர் பெறும் திட்டம் அறிமுகமாகிறது | |
ஐந்தே நிமிடத்தில் மணியார்டர் பணத்தை பெறுவதற்கான திட்டத்தை நாடு முழுவதும் இந்த ஆண்டில் அமல்படுத்த இந்திய தபால் துறை திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் மணியார்டர் அனுப்புவர்கள் , அதிகபட்சமாக 5,000 ரூபாய் அனுப்பலாம் என்று இருக்கிறது.அவ்வாறு அனுப்பப்படும் மணியார்டரும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்க ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகிறது,
இந்நிலையில், மாறிவரும் தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப மணியார்டர் திட்டத்தில் துரிதமான சேவையை அறிமுகப்படுத்த தபால் துறை திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி மணியார்டர் அனுப்புவதற்கான அதிகபட்ச தொகை 50,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.அத்துடன் அவ்வாறு நாட்டின் எந்த ஒரு மூலையிலிருந்து அனுப்பப்படும் மணியார்டரும், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஐந்தே நிமிடத்தில் கிடைக்கும் வசதியை கொண்டதாக இத்திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
'இன்ஸ்டன்ட் மணியார்டர் ' (ஐஎம்ஓ) எனப்படும் இத்திட்டத்தில் மணியார்டர் அனுப்புவோர், தங்களது அனுப்ப விரும்பும் தொகையை,ஏதாவது ஒரு தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.அவ்வாறு டெபாசிட் செய்த பின்னர் அந்த நபருக்கு ஒரு ரகசிய எண் (கோட்) தெரிவிக்கப்படும்.
அந்த எண்ணை அந்த நபர்,யாருக்கு பணம் அனுப்பிகிறாரோ அவருக்கு தெரியப்படுத்த வேண்டும்.அதனை தெரிந்துகொள்ளும் நபர் தனது ஊரில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று அந்த ரகசிய எண்ணை தெரியப்படுத்தி பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அதே சமயம் பணம் பெற்றுக் கொள்ள செல்லும் நபர், தனது அடையாளத்தை நிரூபிக்கும் அட்டையையோ அல்ல்லது சான்றிதழையோ எடுத்துச் செல்ல வேண்டும்.இந்த ஒரு அம்சத்தை தவிர வேறு எந்த ஒரு பிரச்சனையும் பணம் பெறச் செல்வோருக்கு கிடையாது.
இந்த திட்டத்தின் கீழ் பணம் அனுப்புவதற்கு, வழக்கமான மணியார்டர் கட்டணத்தை விட சிறிதளவே கூடுதலாக வசூலிக்கப்படும்.
தபால் துறை சமீபத்தில் அறிமுகப்படுத்திய இந்த இன்ஸ்டன்ட் மணியார்டர் திட்டம், நாடு முழுவதும் 600 இடங்களில் செயல்பாட்டில் உள்ளது.விரைவிலேயே இந்த திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என தபால் துறை பொது மேலாளர் ஜான் ஜாமுவேல் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பப்படும் மணியார்டர் கூட சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்க ஒரு நாள் ஆகிவிடுகிறது.
ஆனால் ஐஎம்ஓ திட்டத்தின் மூலம் அனுப்பபடும் மணியார்டர்கள் சம்பந்தப்பட்டவருக்கு ஐந்தே நிமிடத்தில் கிடைத்து விடுவது கிராமப்புறங்களில் இருக்கும் சாமன்ய மக்களுக்கு உண்மையிலேயே மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும்.
இதனிடையே மேற்கூறிய மணியார்டர் திட்டம் தவிர, வாடிக்கையாளர்கலின் வீடுகளுக்கே நேரில் சென்று பார்சல்களை பெற்று அதனை ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், இதற்கு வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் சாமுவேல் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பிரிவோம் சந்திப்போம் | | அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|