யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் கட்டுரைகள்
'பங்குச் சந்தையில் தாராள அன்னிய முதலீடு'
- ரகு
பங்குச் சந்தையில் தாராள அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் வகையில் , ன்னிய முதலீடு வருவதை கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மறுஈட்டுக் கடன், பொருளாதார தேக்கநிலை, வேலை இல்லா திண்டாட்டம், நுகர்வோர் வாங்கும் சக்தி குறைந்தது உட்பட பல்வேறு காரணங்களினால் அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதனை சரிக்கட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் 150 பில்லியன் டாலருக்கு வரி குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளார். இத்துடன் அமெரிக்க ரிசர்வ் வங்கி கடன் மீதான 0.75 சதவீத வட்டியை குறைப்பதாக ஜனவரி 23 ம் தேதியன்று அறிவித்தது.

அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு, இந்த வட்டி குறைப்பினால் வருவாய் குறையும் என்பதால் பல்வேறு நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பும் வீழ்ச்சியடையும்.

இந்த நஷ்டத்தில் இருந்து தற்காத்து கொள்ள அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்தியா போன்ற பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் பங்குச் சந்தை, நிதி சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பிப்பார்கள்.

இதேபோல் அன்னிய செலவாணி இருப்பாக அமெரிக்க டாலரை வைத்துள்ள நாடுகள், டாலரை விற்பனை செய்து விட்டு அதற்கு பதிலாக யூரோ, பவுண்ட் போன்ற நாணயங்களை வாங்குவார்கள்.இதனால் டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் மேலும் குறையும்.

இவை ஒரளவு அமெரிக்காவுக்கு சாதகமான நிலை என்றாலும், இந்தியா போன்ற நாடுகளின் ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும். ஏற்றுமதி நிறுவனங்கள் நெருக்கடியை சந்திக்க வேண்டியதிருக்கும்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்று கொண்டிருக்கும் 38வது உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க சென்ற நிதியமைச்சர் சிதம்பரத்திடம், மேற்கூறிய நெருக்கடியை எப்படி சமாளிக்க போகிறீர்கள் என்று கேட்டபோது," இந்த நிலையை சமாளிக்க தேவையான பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அன்னிய முதலீடு வருவதை சிறிதளவு கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரிசர்வ் வங்கி தேவையான முயற்சியை செய்யும். நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றோம்.அமெரிக்கா வட்டியைக் குறைத்ததால், இந்தியாவிற்கு அதிகளவு முதலீடு வருவது கவனத்தில் கொள்ள வேண்டியதுதான்.ஆனால் அந்நிய முதலீட்டை கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை " என்று பதிலளித்தார்.

மற்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டாலும், இந்திய பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கிறது.

ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி விலைவாசி அதிகரிப்பதாலும், டாலரின் மதிப்பு குறைவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ள சூழ்நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது !
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'சுஸுகி கார் விற்பனை 7 சதவீதம் அதிகரிக்கும்'
'உள்நாட்டு ஐடி வர்த்தகம் 10 பில்லியன் டாலரைத் தொடும்'
நெட்டிசன்களை வசீகரிக்கும் இணையதள வர்த்தகம்!
பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு 300 பில்லியன் டாலர் இழப்பு !
கார் விற்பனை அதிகரித்து பைக் விற்பனை படுத்தது !
புதிய ஆரஞ்சு நாத்து அறிமுகம் : பஞ்சாப் பல்கலை. சாதனை
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பிரிவோம் சந்திப்போம்
அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு...
புலி வருது
மிருகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace