யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் கட்டுரைகள்
'சுஸுகி கார் விற்பனை 7 சதவீதம் அதிகரிக்கும்'
- பா. முகிலன்
இந்த ஆண்டில் சர்வதேச அளவில் தங்களது கார் விற்பனை 7 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக உலகின் முன்னனி வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலக அளவில் குறைந்த எரிபொருள் திறன் கொண்ட வாகனங்களுக்கான தேவைப்பாடு அதிகரித்து வருவதால், தங்களது நிறுவன தயாரிப்பு வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக சுஸுகி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஒஸாமு சுஸுகி தெரிவித்துள்ளார்.

மேலும் டாடாவின் (ஒரு லட்ச ரூபாய்) 2,500 அமெரிக்க டாலர் விலையுள்ள கார் சந்தைக்கு விற்பனைக்கு வரவுள்ளதால் தங்களது கம்பெனி தயாரிப்பு கார் விற்பனை பாதிக்காது என்று கூறிய ஒஸாமு, அதே சமயம் அதே ரக காரை தயாரிக்கும் எண்ணம் எதுவும் தங்களது நிறுவனத்திற்கு இப்போதைக்கு இல்லை என்றும், ஏனெனில் அதன் பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழலில் ஏற்படுகிற தாக்கம் போன்றவை குறித்த கவலைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறைந்த விலை மற்றும் எரி பொருள் திறன் கொண்ட கார்களை இந்தியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் இதர வளரும் சந்தைகளில் விற்பதில் படிப்படியாக வளர்ந்து வருகிறது சுஸுகி நிறுவனம்!

இந்தியாவில் இந்நிறுவனத்தின் அபரிதமான வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளது, அதன் லோக்கல் யூனிட்டான மாருதி சுஸுகிதான் !

ஆசிய சந்தையில் சுஸுகி கார் விற்பனை வளர்ச்சி அபரிதமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ள நிலையில் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளால்தான் தம்து நிறுவனம் ஆசிய சந்தையில் மிகுந்த பயனடைவதாக கூறுகிறார் ஒஸாமு சுஸுகி.

அதே சமயம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பது மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் கவலை அளிப்பதாக உள்ளது எனறும் கூறுகிறார் ஒஸாமு !
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'உள்நாட்டு ஐடி வர்த்தகம் 10 பில்லியன் டாலரைத் தொடும்'
நெட்டிசன்களை வசீகரிக்கும் இணையதள வர்த்தகம்!
பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு 300 பில்லியன் டாலர் இழப்பு !
கார் விற்பனை அதிகரித்து பைக் விற்பனை படுத்தது !
புதிய ஆரஞ்சு நாத்து அறிமுகம் : பஞ்சாப் பல்கலை. சாதனை
லாபத்தை குவிக்கும் பரஸ்பர நிதி முதலீடு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பிரிவோம் சந்திப்போம்
அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு...
புலி வருது
மிருகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace