|
| 'உள்நாட்டு ஐடி வர்த்தகம் 10 பில்லியன் டாலரைத் தொடும்' | |
இந்தியாவில் உள்நாட்டு தகவல் தொழில் நுட்ப (ஐடி)சேவைகள் அளிக்கும் நிறுவனங்களின் வர்த்தகம், வருகிற் 2011 ம் ஆண்டில் சுமார் 10.73 பில்லியன் டாலரைத் தொடும் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியாவில் உள்ள உள்நாட்டு தகவல தொழில் நுட்ப சேவைகள் அளிக்கும் நிறுவனங்களின் வர்த்தகம், தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.தகவல் தொழில் நுட்பத் துறைகளின் தேய்மான விகிதம் தொடர்ந்து அதிக அளவு உள்ளபோதிலும், இத்துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதம், ஐந்தாண்டுகளுக்கு 23.2 சதவீதமாக இருக்கும் என, ' கர்ட்டனர் ' என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களின் இந்த வளர்ச்சிக்கு விரைந்து செயல்படும் தன்மை, பணியில் புதுமை போன்றவைதான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
அத்துடன் பொருளாதார வளர்ச்சி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அரசுத் திட்டங்கள் ஆகியவற்றின் அபரிதமான வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களிடத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது போன்றவைதான் ,தகவல் தொழில் நுட்ப சேவைகள் சந்தையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
தகவல் தொழில் நுட்ப (ஐடி) சேவை அளிக்கும் ஏராளமான நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கம்பெனிகள் போன்றவை உள்நாட்டு சந்தையின் மகத்துவத்தை தற்போது உணர்ந்து, அவற்றில் மேலும் வலுவாக காலூன்றுவதற்கான யுக்திகளை வகுத்து வருகின்றன.
அத்துடன் வளர்ச்சியடைந்து வரும் உள்நாட்டு சந்தை வாய்ப்புகளை பிடிப்பதற்காக பல்வேறு ஐடி நிறுவனங்களும் , தங்களது கிளை நிறுவனங்களை, அந்தந்த பகுதியில் நிலவும் சந்தை நிலவரத்திற்கேற்ப செயல்படும் வகையில் தனித்து இயங்கும் வகையில் மாற்றி வருவதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பிரிவோம் சந்திப்போம் | | அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|