|
| பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு 300 பில்லியன் டாலர் இழப்பு ! | | - பா. முகிலன் |
| மும்பை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜனவரி 2008 ( 20:04 IST ) |
|
மும்பை பங்குச் சந்தையில் இன்று முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் புள்ளிகளில் கடும் சரிவு ஏற்பட்ட நிலையில், கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் மும்பை பங்குச் சந்தை (தலால் ஸ்ட்ரீட்) முதலீட்டாளர்களுக்கு 300 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்பை ரூபாய் மதிப்பில் கூறுவதானால் சுமார் 11 லட்சத்து 85,285 கோடியாகும்.இது மிகப் பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு, மும்பை பங்குச்சந்தையில் இன்று பிற்பகல் 2.50 மணியளவில் சென்செக்ஸ் 2,049.74 புள்ளிகள் சரிந்து, 17 ஆயிரத்துக்குக் கீழே சென்ற நிலையில், 1,400 புள்ளிகள் சரிவுடன் மாலையில் வர்த்தகம் முடிவடைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கியபோதே சென்செக்ஸ் 94 புள்ளிகள் சரிவுடன் 19, 014 ஆக காணப்பட்டது.
அதன் பின்னர் சென்செக்ஸ் புள்ளிகள் தொடர்ந்து சரிவை நோக்கி செல்லத் துவங்கி, கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.
மும்பை பங்குச்சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடையும்போது, சென்செக்ஸ் 687.12 புள்ளிகள் சரிந்து 19,013.70-ல் நிலை கொண்டிருந்தது.
இந்நிலையில், முன்னணி நிறுவனப் பங்குகளை விற்பதில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து போட்டிப் போட்டு விற்றதாலும், சர்வதேச பங்குச்சந்தைகளில் நிலவி வரும் பாதகமான நிலையின் எதிரொலியாகவும்,சென்செக்ஸ் புள்ளிகள் இதுவரை இல்லாத அளவிற்கு 4 இலக்க எண்களில் சரிந்தது.
அதிலும் பிற்பகல் 2.50 மணியளவில் சென்செக்ஸ் 2,049.74 புள்ளிகள் வரை சரிந்து, 16,963.96 என்ற நிலைக்கு சென்றுவிட்டது.
டிஎல்எஃப், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எல் அண்ட் டி, சிப்லா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனப் பங்குகளின் மதிப்பு வெகுவாக சரிந்திருந்தன.
இந்நிலையில் மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 1, 408 புள்ளிகள் சரிந்து 17, 605 ல் நிலைகொண்டது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி, டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை மேலும் குறைக்க முடிவு செய்திருப்பதாகவும், இதன் தாக்கம் மும்பை பங்குச்சந்தையில் எதிரொலிக்கும் என்றும் வெளியான தகவலைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த சிறு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை இன்று மிக அதிக அளவில் விற்றதன் காரணமாக கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்றைய வர்த்தகத்துடன் சேர்த்து கடந்த ஒரு வார கால, அதாவது ஆறு வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 3,22.1 புள்ளிகள் சரிந்துள்ளது.இதன் காரணமாக மூலதனச் சந்தையின் மொத்த மதிப்பில் 11 லட்சத்து 85, 285.46 கோடி ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஜனவரி 14 ம் தேதி வர்த்தகம் தொடங்கியபோது 71 லட்சத்து 38, 810 கோடி ரூபாயாக இருந்த மூலதனச் சந்தையின் மொத்த மதிப்பு, இன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது 59 லட்சத்து 53,525.87 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தது.
அதேபோன்று முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாள் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பு மட்டும் 6,63, 975 கோடி ரூபாயாகும்.அதேபோன்று கடந்த வாரத்தில் ஐந்து வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பு 5, 21, 310 கோடி ரூபாய் என பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | புலி வருது | | மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|