யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் கட்டுரைகள்
கார் விற்பனை அதிகரித்து பைக் விற்பனை படுத்தது !
- பி. முகிலன்
கடந்த 2007 டிசம்பரில் கார் விற்பனை8.8 சதவீதம் திகரித்து, பைக் விற்பனை 11.4 சதவீதம் சரிந்துள்ளது.

பைக் விற்பனை சரிந்தது இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களுக்கு 2007ம் ஆண்டை மறக்க முடியாத ஆண்டாக ஆக்கிவிட்டது.

இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலின்படி, கடந்த 2007 ம் ஆண்டில் உள்நாட்டு சந்தையில் பயணிகள் கார் விற்பனை 88,220 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு விற்பனையான 81, 033 கார்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது 8.8 சதவீதமாகும்.

அதே சமயம் 2007 நவம்பர் மாத விற்பனையைக் காட்டிலும், டிசம்பர் மாத கார் விற்பனை சதவீதம், இரட்டை இலக்க எண்ணிலிருந்து ஒற்றை இலக்க எண்ணாக குறைந்துள்ளது.

இதற்கு இம்மாதம் டெல்லியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த புதிய மாடல் கார்களின் கண்காட்சியை கருத்தில் கொண்டு, புதிய கார் வாங்க நினைத்தவர்கள், அந்த முடிவை தள்ளிப்போட்டதும் விற்பனை சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்ததாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.

இந்த கார் விற்பனை சரிவு 2007 ம் ஆண்டின் மொத்த வாகன விற்பனையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பரில் விற்பனையான மொத்த வாகனங்களின் எண்ணிக்க்கை 7,73,972 ஆகும்.அதுவே 2007 ம் ஆண்டி டிசம்பரில் 7, 29, 915 ஆக குறைந்து 5.6 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதே சமயம் ஒரு சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டும் 2007 டிசம்பர் மாதத்தில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் கூடுதல் விற்பனையை சந்தித்துள்ளன.

உதாரணமாக கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், 2007 டிசம்பரில் 50, 056 கார்களை விற்பனை செய்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டின் டிசம்பர் மாதத்தில் விற்பனை ஆன 47, 877 கார்களின் எண்ணிகையுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகமாகும்.

அதேபோன்று மாருதியின் போட்டி நிறுவனமான ஹூண்டாய் 18.2 சதவீத வளர்ச்சியைக் கண்டு 13, 069 கார்களை விற்பனை செய்துள்ளது. 2006 டிசம்பரில் இது 11, 049 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10, 876 கார்களை மட்டுமே விற்று 14 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பரில் இது 12, 672 ஆக இருந்தது.

அதே சமயம் ஜெனரமோட்டார்ஸ் கார் விற்பனை 2006 டிசம்பர் மாதத்தைக் காட்டிலும், 2007 டிசம்பரில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 2006 டிசம்பரில் 1,064 கார்கள் விற்பனையான நிலையில், 2007 டிசம்பரில் இது 4,130 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிள் விற்பனை 2006 டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 2007 டிசம்பரில் 11. 4 சதவீத வீழ்ச்சியடைந்துள்ளது.குறிப்பாக பைக் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மற்றும் ஹீரோ ஹோண்டா ஆகிய மூன்றுமே விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புதிய ஆரஞ்சு நாத்து அறிமுகம் : பஞ்சாப் பல்கலை. சாதனை
லாபத்தை குவிக்கும் பரஸ்பர நிதி முதலீடு
ஏற்றுமதி அதிகரிப்பால் பருத்தி விலை உயர்வு
வெளிநாட்டு விரிவாக்கத்தில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தீவிரம்
இளம் ஐடி பணியாளர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு
47 % ஆதாயம் கண்ட மும்பை பங்குச் சந்தை !
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace