யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் கட்டுரைகள்
லாபத்தை குவிக்கும் பரஸ்பர நிதி முதலீடு
- ரகு
பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை விட, பரஸ்பர நிதிகள் மூலமாக முதலீடு செய்வதன் வாயிலாக கூடுதல் லாபத்தை ஈட்ட முடியும் என இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

பங்குச் சந்தையில் சமீப காலமாகவே தினமும் பங்குகளின் விலை அதிகரிப்பது அல்லது குறைவது என்ற போக்கு காணப்பபடுகிறது.பங்குச் சந்தையின் போக்கு, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள்,அத்துடன் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் ஆகியோரை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் அன்றாடம் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து,பங்குகளை விற்பனை செய்வது அல்லது வாங்குவது என்பது கடினமான ஒன்று.

இவர்களுக்காகவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் யூனிட்டுகளை வெளியிட்டு முதலீடு திரட்டுகின்றன.இதை பங்கு மற்றும் நிதிச் சந்தை நிபுணர்கள் முதலீடு செய்கின்றனர்.இந்த முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் யூனிட் வாங்கியவர்களுக்கு பிரித்து தரப்படுகிறது.

சென்ற வருடம் பங்குச் சந்தையில் நேரடியாக மூதலீடு செய்ததை விட, பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலமாக செய்த மூதலீட்டிற்கு அதிக வருவாய் கிடைத்திருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதாவது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 47.1 சதவீதமும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 54.8 சதவீதமும் அதிகரித்துள்ளது.ஆனால் 152 பரஸ்பர நிதிகளின் வருவாய், பங்குச் சந்தை குறியீட்டு எண்களின் வருவாயை விட அதிகமாக உள்ளது என ' வேல்யூ ரிசர்ச் ' என்ற பங்குச் சந்தை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.
2007 ஆம் ஆண்டில் 209 பரஸ்பர நிதிகளில், 13 முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யும் யூனிட்டுகளை வாங்கியவர்களின் முதலீட்டின் மதிப்பு 90 முதல் 112 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

வரி சேமிப்புடன், பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தையில் முதலீடு செய்யும் 209 பரஸ்பர நிதி திட்டங்களில், 57 திட்டங்கள் மட்டுமே சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகளை விட குறைவான வருவாய் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட209 பரஸ்பர நிதி திட்டங்களில் 139 திட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஏற்றுமதி அதிகரிப்பால் பருத்தி விலை உயர்வு
வெளிநாட்டு விரிவாக்கத்தில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தீவிரம்
இளம் ஐடி பணியாளர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு
47 % ஆதாயம் கண்ட மும்பை பங்குச் சந்தை !
அன்னிய நேரடி முதலீடு : உலக நாடுகளை வசீகரிக்கும் இந்தியா!
2007 : பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி!
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace