|
| ஏற்றுமதி அதிகரிப்பால் பருத்தி விலை உயர்வு | | - ரகு |
| திங்கள்கிழமை, 7 ஜனவரி 2008 ( 19:55 IST ) |
|
இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி இருமடங்கு அதிகமாகியுள்ள நிலையில், உள்நாட்டு சந்தையில் அதன் விலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து அந்நிய நாடுகளுக்கு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதத்தில் 55 லட்சம் பேல் பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 1 பேல் என்பது 170 கிலோ அல்லது 375 பவுன்ட். இது சென்ற வருடத்தைவிட அதிகமாகும்.
சர்வதேச அளவில் இந்தியா, பருத்தியை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முன்பு அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்துதான் அதிகளவு பருத்தியை இறக்குமதி செய்தன.ஆனால் இந்த ஆண்டு மேற்கூறிய நாடுகளும் இந்தியாவில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளன.
இதில், சீனா அதிகளவு பருத்தியை இறக்குமதி செய்ய வசதியாக பருத்திக்கான இறக்குமதி வரியை குறைத்துள்ளது.
அத்துடன் அமெரிக்காவில் இந்த வருடம் பருத்தி விளைச்சல் , கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவில் பருத்தி பயிரிடும் விவசாயிகள், இதை விட லாபகரமாக உள்ள சோயா, கோதுமை ஆகியவைகளுக்கு மாறிவிட்டனர்.
இதனால் இந்த வருடம் அமெரிக்காவில் பருத்தி உற்பத்தி குறையும். முன்பு அமெரிக்காவில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்த நாடுகள், இந்த வருடம் இந்தியாவில் இருந்து அதிக அளவு இறக்குமதி செய்யும். அத்துடன் அதிகளவு பருத்தி உற்பத்தியாகும் மற்ற நாடுகளிலும், இந்த வருடம் பருத்தி உற்பத்தி பாத்க்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை இந்திய ஏற்றுமதியாளர்கள் நன்கு பயன் படுத்த துவங்கி உள்ளனர். இதனால் தான் சென்ற வருடத்தில் ஏற்றுமதி செய்த அளவை விட, கடந்த மூன்று மாதங்களில் ஏற்றுமதி செய்த அளவு அதிகரித்துள்ளது.
இதனால் உள்நாட்டில் பருத்தி விலை அதிகரித்துள்ளது. இதன் விலை கடந்த மாதங்களில் குறுகிய இழை பருத்தியின் விலை 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதே போல் முதல் தர பருத்தியின் விலை 40 சதவீதம் வரை அதிகரித்து விட்டது.
இந்நிலையில் பருத்தி ஏற்றுமதியால் உள்நாட்டு விலை அதிகரிப்பது ஆயத்த ஆடை, பின்னலாடை, தரை விரிப்பு, படுக்கை விரிப்பு போன்ற பருத்தியினால் தயாரிக்கப்படும் பொருட்களை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஜவுளி சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பெண்கள் மற்றும் படிப்புக் குறைந்த பணியாளர்கள் போன்றவர்களின் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|