யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் கட்டுரைகள்
வெளிநாட்டு விரிவாக்கத்தில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தீவிரம்
- பி. முகிலன்
அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தனது கிளைகளை விரிவாக்கம் செய்வது குறித்து சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ்,இந்தியாவின் சிறிய நகரங்களிலும், வெளிநாடுகளில் தனது தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிறிய நிறுவனங்களை கையகப்படுத்தி, அந்நிறுவனங்களில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி தனது கிளைகளை விரிவுபடுத்தவும் சத்யம் திட்டமிட்ட்டுள்ளது.

இது தொடர்பாக தொழில்நுட்ப நிபுணர்களுடன் அந்நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

சத்யம் நிறுவனத்திற்கு தற்போது கிடைக்கும் வருவாயில் சுமார் மூன்று சதவீதம் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் உள்ள கிளைகள் மூலமாக கிடைத்து வருகிறது.இது தவிர கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் பிரேசிலில் தனது கிளை ஒன்றை அமைத்தது சத்யம்.

இந்த பிரேசில் கிளை மூலமாகவும், கனடாவில் உள்ள கிளை அலுவலகம் மூலமாகவும் தனது தென் அமெரிக்க செயல்பாடுகளையும் மேற்பார்வையிட்டுக் கொள்கிறது சத்யம்.

இந்நிலையில் எகிப்து மற்றும் தென் அமெரிக்காவிலும் தடம்பதித்து தொழிலை விரிவுபடுத்த விரும்புவதாக சத்யம் நிறுவனத்தின் இயக்குனர் ஹரி தலப்பள்ளி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் கிளைளை விரிவுபடுத்துவது ஒருபுறமிருக்க, புவனேஸ்வர் மற்றும் நாக்பூர் போன்ற நகரங்களிலும், வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களிலும் தொழிலை விரிவுபடுத்த சத்யம் திட்டமிட்டுள்ளதாக ஹரி மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இளம் ஐடி பணியாளர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு
47 % ஆதாயம் கண்ட மும்பை பங்குச் சந்தை !
அன்னிய நேரடி முதலீடு : உலக நாடுகளை வசீகரிக்கும் இந்தியா!
2007 : பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி!
5.5 பில்லியன் டாலர் ' டர்ன் ஓவர் ' : ரிலையன்ஸ் ரீடெயில் இலக்கு
2007 : இந்தியா-பிரிட்டன் உறவின் வசந்த காலம்!
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace