|
| இளம் ஐடி பணியாளர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு | |
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதன் காரணமாக, இரண்டாண்டுகளுக்கும் குறைவான அனுபவம் உள்ள அல்லது அனுபவம் இல்லாத புதிய இளம் பணியாளர்களை பணியில் அமர்த்த முன்னனி தகவல் தொழில் நுட்ப ( ஐடி ) நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளன.
டாலர் மதிப்பு சரிந்து ரூபாய் மதிப்பு உயர்ந்ததற்கும் இளம் பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுவதில் நியாயமில்லாமல் இல்லை.
முன்னணி ஐடி நிறுவனங்கள் பெரும்பாலானவை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவையான தகவல் தொழில் நுட்ப சேவைகளை செய்து கொடுப்பதன் மூலமாகத்தான். தங்களது வருவாயை டாலர்களில் குவித்து வருகின்றன.
இந்நிலையில், சமீப காலமாக டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால், ஐடி நிறுவனங்களின் வருவாய் குறைந்து வருகிறது.
இந்நிலையில், ஐடி நிறுவனங்களின் வருவாயில் கணிசமான சதவீதம், பணியாளர்களின் ஊதியத்திற்காக செலவிடப்படுகிறது.
திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை தக்கவைப்பதில் ஐடி நிறுவனங்களிடையே காணப்படும் போட்டி காரணமாக, பணியாளர்களுக்கான் ஊதியமும் அள்ளி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட குறைந்த ஊதியத்தில் பணியாளர்களை அமர்த்துவதற்கான முயற்சியை ஐடி நிறுவனங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.
அதே சமயம் இரண்டாண்டுகள் அல்லது அதற்கு மேல் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்ற முன் வர மாட்டார்கள் என்பதால், இரண்டாண்டுகளுக்கு குறைவான அனுபவம் உள்ளவர்கள் அல்லது அப்பொழுதான் படித்து முடித்து வெளியே வரும் புதிய பணியாளர்களை பணியில் அமர்த்த ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
உதாரணமாக ஐபிஎம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், குறைந்த ஊதியத்தை மனதில் கொண்டு வருகிற 2009 ம் ஆண்டில் சுமார் 2 லட்சம் புதிய பணியாளர்களை அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இன்ஃபோசிஸ் முதல் டாடா கன்சல்டன்சி வரையிலான இந்திய முன்னனி ஐடி நிறுவனங்கள் வருகிற 2008 மற்றும் 2009 ம் ஆண்டுகளில் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ள புதிய பட்டாதாரிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ள ஊதியம், இதர நிறுவனங்களைக் காட்டிலும் சராசரியாக 40 சதவீதம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி அதிக ஊதியம் வழங்கப்படுகிற பட்சத்தில், படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் புதிய பணியாளர்கள் கூட இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களில் சேருவதற்குதான் ஆர்வம் காட்டுவார்கள்.
மேலும் இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி போன்ற நிறுவனங்கள் வருகிற 2009 ம் ஆண்டில் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ள புதிய பட்டாதாரிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளன.
உதாரணமாக 2008 ம் ஆண்டில், தங்கள் பட்டியலில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு 53 பேரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ள டிசிஎஸ், 2009 ம் ஆண்டில் அந்த எண்ணிக்கையை 78 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் வரவிருக்கும் காலங்களில் புதிய பட்டாதாரி இளம் பணியாளர்களுக்கான தேவைப்பாடு இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும் !
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|