|
| அன்னிய நேரடி முதலீடு : உலக நாடுகளை வசீகரிக்கும் இந்தியா! | | - எஸ்.சரவணன் |
| வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2007 ( 17:36 IST ) |
|
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு, உலக நாடுகள் பலவும் வியப்பில் ஆழ்ந்துள்ளன. இதற்கு, நாட்டின் அன்னிய நேரடி முதலீடு 2007-ல் வெகுவாக உயர்ந்திருப்பதேச் சான்று.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான ஆறு மாதத்தில் மட்டும் 720 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், 65 சதவிகிதம் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 2007-ன் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை அன்னிய நாடுகளில் 3,500 கோடி டாலர்கள் மதிப்பில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
முந்தைய நிதியாண்டைப் பார்ப்போமானால் (2005-06), இந்தியாவுக்கு 1,570 கோடி டாலர்களை அந்நிய நேரடி முதலீடு வந்தது. அதே நிதியாண்டில் அன்னிய நாடுகளில் இந்தியா முதலீடு செய்த தொகையின் அளவு, 2,400 கோடி டாலர்கள் ஆகும்.
சர்வதேச அளவில் அன்னிய நேரடி முதலீடு பெறுவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில், முதல் இடத்தில் சீனா உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பெரும் அளவில் இந்தியாவில் முதலீடு செய்யவே விரும்புகின்றன.
இதற்கு, இந்தியா கடைப்பிடித்துவரும் தாராள பொருளாதார கொள்கை மற்றும் நாட்டின் காணப்படும் அபாரமான சந்தை வாய்ப்பு ஆகியவையே காரணம்.
மேலும், நாட்டில் கிடைக்கும் இயற்கை தாது வளம், மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிய தயாராக இருக்கும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
குறிப்பாக, நாட்டில் நுகர்வுத் திறன் கொண்ட மத்திய வருவாய் பிரிவினரின் (மிடில் கிளாஸ்) எண்ணிக்கை 30 கோடியாக இருப்பதும் அன்னிய நேரடி முதலீட்டின் உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - வாழ்க்கையை காலத்தின் போக்கில் விட்டுவிடாமல், இலக்குகள் பலவற்றை நிர்ணயித்து அதை அடையும் முயற்சியில் தொடர்ந்து... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பில்லா | | பிரபலமான சர்வதேச கடத்தல்காரன் பில்லா (அஜித்), ஒவ்வொரு முறையும் போலீசாருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தலைப்பை பார்த்தவுடன் 'ஆரோக்கியத்துக்கும் வண்ணங்களுக்கும் என்ன தொடர்பு?' என்ற சந்தேகம் எழுவது தெரிகிறது.... |
| |
|
|
|
|
|
|
|