|
| 2007 : பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி! | | - எஸ்.சரவணன் |
| புதன்கிழமை, 26 டிசம்பர் 2007 ( 19:13 IST ) |
|
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் அதிக அளவிலான நேரத்தை மத்திய அரசு செலவிட்டிருக்குமேயானால், அது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளே என்றால் அது மிகையாகாது. இதில், அரசு வெற்றி பெற்றுள்ளது என்பது தெளிவு.
2007-ல் பணவீக்கம் 5 சதவிகிதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. ஆனால், ஆண்டில் தொடக்கத்தில் அந்தக் கணிப்பைக் காட்டிலும் பணவீக்கம் உயர்ந்து இருந்தது.
அதற்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் தானிய வகைகள் மற்றும் தயாரிப்பு பொருட்களின் விலையில் கடுமையான ஏற்றம் இருந்ததே காரணம்.
எனவே, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி, பணவீக்கத்தின் அளவைக் குறைக்கும் நோக்கத்தில், கோதுமை உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
அதேபோல், வங்கிகளுக்கான கடன் வட்டிவிகிதத்தை உயர்த்துவது, வங்கிகளின் இருப்பின் விகிதத்தை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும் மேற்கொண்டது.
இவற்றின் பலனாக, கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் 6.12 சதவிகிதமாக இருந்த நாட்டின் பணவீக்கம், மே மாத கடைசி வாரத்தில் 5 சதவிகிதமாக குறைந்தது.
அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக பணவீக்கம் குறையத் தொடங்கியது. அதன்பின் 4 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தது.
இறுதியில், பணவீக்கம் கடந்த (டிசம்பர்) 8-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 3.65 சதவிகிதமாக குறைந்தது. இது, 2006-ல் இதே காலக்கட்டத்தில் 5.63 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், "அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. பணவீக்க விவகாரம், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்" என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆயினும், கடந்த ஆண்டுடனும் ஒப்பிடுகையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் முயற்சியில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
'5 சதவிகிதமாக இருக்கும்' என்ற ரிசர்வ் வங்கியின் கணிப்பைக் காட்டிலும் குறைந்த அளவான 3 முதல் 4 சதவிகிதத்துக்குள் பணவீக்கம் இருப்பதே மத்திய அரசின் வெற்றிதான்!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - வாழ்க்கையை காலத்தின் போக்கில் விட்டுவிடாமல், இலக்குகள் பலவற்றை நிர்ணயித்து அதை அடையும் முயற்சியில் தொடர்ந்து... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பில்லா | | பிரபலமான சர்வதேச கடத்தல்காரன் பில்லா (அஜித்), ஒவ்வொரு முறையும் போலீசாருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தலைப்பை பார்த்தவுடன் 'ஆரோக்கியத்துக்கும் வண்ணங்களுக்கும் என்ன தொடர்பு?' என்ற சந்தேகம் எழுவது தெரிகிறது.... |
| |
|
|
|
|
|
|
|