|
| 5.5 பில்லியன் டாலர் ' டர்ன் ஓவர் ' : ரிலையன்ஸ் ரீடெயில் இலக்கு | |
சில்லரை விற்பனை துறையில், கிடுகிடு வளர்ச்சியடைந்துள்ள பிரபல ரிலையன்ஸ் ரீடெயில் லிமிடெட் நிறுவனம், வருகிற 2010 ம் ஆண்டு வாக்கில் 5 முதல் 5.5 பில்லியன் டாலர் அளவுக்கு ' டர்ன் ஓவர் ' செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
பல ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் இந்தியாவின் சில்லரை விற்பனை சந்தையில் சமீப காலமாக பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது ரிலையன்ஸ், பார்தி என பல்வேறு முன்னணி நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன.
இதில் ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆறு மாத காலங்களில் அசுர வளர்ச்சியடைந்து ள்ளது.தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஏராளமான கிளைகளை திறந்து வருகிறது.
மளிகை சாமான்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமல்லாது மின்னணு பொருட்கள், தொலைபேசிகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களும் ரிலையன்ஸ் சில்லரை விற்பனைக் கடைகளில் விற்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த வர்த்தகத்தை தொடர்ந்து விரிவுபடுத்தும் நோக்கில் வருகிற 2011 ம் ஆண்டு வாக்கில் 5 முதல் 5.5 பில்லியன் டாலர் டாலர் வரை ' டர்ன் ஓவர் ' செய்ய ரிலையன்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான அஜய் பாய்ஜல் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் மின்னணி பொருட்கள், தொலைபேசி மற்றும் வீட்டுக்கான ஐடி பொருட்கள் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களுக்கான தற்போதைய இந்திய சந்தை மதிப்பு 70,000 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் இந்த சந்தையின் அளவு ஆண்டுக்கு இருபது சதவீதம் வளர்ச்சி அடைந்தும் வருகிறது.
இந்த சந்தை வளர்ச்சி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது கிளைகளை அதிக அளவில் திறந்து வரும் ரிலையன்ஸ், தன்னுடைய ' டர்ன் ஓவர் ' இலக்கை அடையும் நோக்கில் வருகிற 2011 ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் மேலும் 150 மெகா சில்லரை விற்பனை கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
இதில் கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 10 கடைகள் திறக்கப்பட உள்ளன.மேலும் மேற்கூறிய 150 மெகா சில்லரை விற்பனைக் கடைகளில் 20 முதல் 25 சதவீதம் மும்பை, டெல்லி, கோல்கத்தா மற்றும் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் திறக்கப்பட உள்ளன.
அதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக விரைவிலேயே அதுபோன்ற மெகா கடைகளை ஹூப்லியிலும், ஐதராபாத்திலும் திறக்க ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் அஜய் !
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பொல்லாதவன் | | எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்... |
| |
|
|
|
|
|
|
|