|
| 2007 : இந்தியா-பிரிட்டன் உறவின் வசந்த காலம்! | |
2007-ம் ஆண்டை இந்திய - பிரிட்டன் உறவின் வசந்த காலம் என்று கூறினால் அது மிகையாகாது. வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறுத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மென்மேலும் வலுவாக்குவதற்கான அடித்தளமும் இந்த ஆண்டில்தான் போடப்பட்டுள்ளது.
இதனை உறுதி செய்யும் விதமாக அமையப் போகிறது, பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுனின் 2008 ஜனவரி மாத இந்திய சுற்றுப் பயணம்!
கடந்த ஜூலையில் பிரிட்டனின் பிரதமராக பிரவுன் பதவியேற்றதில் இருந்தே, இந்தியா மீது அதிக அளவில் கவனம் செலுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. இது, பல்வேறு அரசியல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியது.
பிரவுனுக்கு இந்தியா மீது அதிக அளவிலான நம்பிக்கை ஏற்பட, கடந்த ஜனவரியில் தூதராக பயணம் மேற்கொண்டதே காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தின்போது, இந்தியாவுக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை அவர் உணர்ந்தார்.
'பிரிட்டனின் முக்கியம் மிக்க பங்காளி' என இந்தியாவை உலக நாடுகள் பலவும் வருணிக்கும் வகையில், 2007-ல் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அடித்தளமிடப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பில் இந்தியாவுக்கு நிரந்தர இடமளிக்க ஆதரவு தரும் நாடுகளில் வலிமையானதாகவும், குறிப்பிடத்தக்கதாகவும் திகழும் பிரிட்டன், இந்திய அரசுடன் இணைந்து பல்வேறு துறைகளிலும் செயலாற்ற மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது.
அதேபோல், பிரிட்டனில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக இருப்பதும், அவர்கள் மூலம் இருதரப்பு பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் கமேலஷ் ஷர்மா, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியன்று காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளராக பதவியேற்க இருப்பது, இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு உறவுக்கு மேலும் வலு சேர்க்கும் அம்சமாகவே திகழ்கிறது.
மொத்தத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிந்தைய காலக்கட்டத்தில், இந்த ஆண்டைப் போல் இரு நாடுகளுக்கான உறவு சிறப்பானதாக இருந்ததாகத் தெரியவில்லை என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பொல்லாதவன் | | எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்... |
| |
|
|
|
|
|
|
|